பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று முதல்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2019

பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று முதல்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு


பிளஸ் 2 தேர்வர்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வெழுதிவிடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (மே 8) முதல்scan.tndge.in என்ற இணையதளத்தில் தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் அதே இணையதள முகவரியில் ‘‘Application forRetotalling / Revaluation’’ என்றஇணைப்பில் சென்று விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து இன்று (மே 8) முதல் மே 10-ம் தேதி மாலை5.00 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவ லகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுமதிப்பீடுக்கு எல்லா பாடங்களுக்கும் ரூ.505 கட்டணமாகச்செலுத்த வேண்டும். மறுகூட்ட லுக்கு விண்ணப்பிப்போர்உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்றபாடங்களுக்கு ரூ.205 கட்டணமாக செலுத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி