கல்பனா சாவ்லா விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் - kalviseithi

May 30, 2019

கல்பனா சாவ்லா விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசின் சார்பில் துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது  ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும்.இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு  தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விரிவான தன்விவரக்குறிப்பு, விரிவான விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலர், பொதுத் துறை,தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினர் விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி