ஒரே நாளில் 3 நுழைவு தேர்வுகள் - kalviseithi

May 21, 2019

ஒரே நாளில் 3 நுழைவு தேர்வுகள்


எதை எழுதுவது, விடுவது என தவிப்புசென்னை:உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, எய்ம்ஸ் மருத்துவ நுழைவுதேர்வு, வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது.இந்த தேர்வு காலை, மாலை என, இரண்டு வேளையும் நடக்கிறது. கணினி முறையில், மூன்றரை மணிநேரம் தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு துவங்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன், தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடை மற்றும் ஆபரண கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய பல்கலை, சென்னையில் உள்ள பொருளியல் கல்லுாரி மற்றும் கோவை மத்திய ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம் படிப்புகளில் சேர, 'கியூசெட்' என்ற, நுழைவு தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வும், வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது.இது தவிர, தேசிய சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, சட்டகல்லுாரிகளில் சேர்வதற்கான, 'கிளாட்' நுழைவு தேர்வும், வரும், 26ம் தேதி பிற்பகலில் நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, ஏற்கனவே, மே, 12ல் நடப்பதாக இருந்தது. பின், 26ம் தேதிக்கு, திடீரெனமாற்றப்பட்டுள்ளது.இப்படி, மூன்று மத்திய நுழைவுதேர்வுகளும், ஒரே நாளில் நடத்தப்படுவதால், மாணவர்கள், கடும் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

மூன்று தேர்வுகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எதில், அதிக மதிப்பெண் மற்றும் தரவரிசை கிடைக்கிறதோ, அந்த படிப்பில் சேரலாம் என்ற நம்பிக்கையில், மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.ஆனால், ஒரே நாளில், மூன்று தேர்வுகளையும் நடத்துவதால், எந்த தேர்வை எழுதுவது, எந்த இரண்டு தேர்வுகளை விடுவது என தெரியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே, தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி