ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைஅறிவிப்பு! - kalviseithi

May 22, 2019

ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைஅறிவிப்பு!


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும். அன்றைய தினமே மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடை பெற்றன. இதர வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ஏப்ரலில் முடிவடைந்தன. அதன் பின்னர் ஏப்ரல்13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் விடுப்பு முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம்தேதி திறக்கப்பட உள் ளன. இதையடுத்து பள்ளி மாணவர் களுக்கு அரசு வழங்கும் பாடப்புத்த கம், சீருடை உட்பட 14 வகை இல வசப் பொருட்கள்பாடநுால் கழக விநியோக மையங்களில் இருந்து தேவையான எண்ணிக்கையில் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் மே 24-ம் தேதியுடன் முடி வடையும். தொடர்ந்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் 25 முதல் 30-ம் தேதிக்குள் இலவச பொருட்களை தனியார் வாகனங்கள் மூலம் எல்லா பள்ளிகளுக்கும் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.பள்ளிகளுக்குத் தரப்படும் பொருட் கள் தேவையான அளவு இருக்கிறதா என தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். குறைவாக இருந்தால் மாவட்டக் கல்வி அதிகாரியைத் தொடர்பு கொண்டு பள்ளி தொடங் கும் முன்பே அதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதேபோல், தேவைப் பட்டியலின்படி இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் முதன்மை கல்விஅதிகாரி மூலம் கூடுதல் பட்டியலை இயக்குநரிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு அனைத்து வகை இலவசப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளுக் கும் மே 31-ம் தேதிக்குள் இலவச பொருட்கள் வழங்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி