தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்படும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்.. - kalviseithi

May 26, 2019

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்படும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்..


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஒதுக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி தவிக்கும் 60 ஆயிரம் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் 2011-12ம் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து. இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் கணினி பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடக்க பள்ளிகளில்தான் கணினி அறிவியல் பாடம் இல்லை. மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் உள்ளதால் அதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கருதி கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் தங்களின் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு பள்ளிகளில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இன்று வரை வேலைவாய்ப்பு கிடைக்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வரும் நிலை உள்ளது.

இதனிடையே மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு ஏற்படுத்திய புதிய கல்விக்கொள்கை காரணமாக ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர முடியும் என்ற நிர்பந்தத்தை
ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த புதிய நடைமுறையை தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு அமல்படுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணி என்பதை சட்டப்பூர்வமாக்கியது. இதில் கணினி பி.எட் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கணினி பி.எட் பட்டதாரிகள் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் இரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 9ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளிலும் கணினி பி.எட் பட்டதாரிகளுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட வில்லை. தமிழக அரசு தொடர்ந்து கணினி பட்டதாரிகளை வஞ்சிக்கும் விதமாக இதுவரை நடத்தப்பட்ட 3 தகுதி தேர்வுகளில் ஒதுக்கப்பட்டது மட்டுமின்றி, தற்போது நடைபெறும் தேர்வுகளிலும் ஒதுக்கி வைத்துள்ளது. இதுவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கணினி பி.எட் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
அரசு அதனை கவனத்தில் கொள்ளவில்லை

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் குமரேசன் கூறியதாவது: கேரளாவில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் 6வது பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் அங்கு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் 6வது பாடமாக கணினி அறிவியல் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்ைக வைத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

6 comments:

 1. Tet pass candidates nearly 90,000....ivrgallu vellai thara matranunga...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. இவர்களுக்குத் தான் PG Post போடபோறார்களே, அப்ப ஏன் கவலை படவேண்டும் ,TET Exam சும்மா தகுதி தேர்வுதான் Appointment உறுதி இல்லை

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள்....
   எங்களுக்கு வேலைவாய்ப்பிற்கான தகுதியை முறையாக அரசுஅங்கிகாரம்பெற்ற கல்லூரியில் பயின்று இருந்தும், அரசுஆசிரியர்பணியில்நுழைவதற்கு நுழைவுத்தேர்வு கூட இல்லை..

   எங்களுக்கானான அரசுப்பள்ளியில் கணினி
   தளத்தையே அரசு உருவாக்கவும் இல்லை,
   அரசுவேலைவாய்ப்பிற்கான நுழைவுத்தேர்வு என்ற வாய்ப்பபையும் அளிக்கவில்லை..

   இதேநிலை தொடர்ந்தால்
   கண்டிப்பாக
   அரசுப்பள்ளிகளை கணினி மயமாக்காமல்
   படிப்படியாக
   அரசுவேலைவாய்ப்பைக்குறைத்து
   அரசுப்பள்ளியின் தரத்தை குறைக்கும் பணியைதெளிவாக செய்கின்றனர்....

   நுழைவு தேர்வு, தரம் என்ற போர்வையில்
   Tet,trb,neet என்ற பெயரில்
   அரசுத்தளங்களிலும் அரசுப்பணியையும்,அரசுத்துறையையும்
   படிப்படியாக காசுகொளிக்கும்தரங்கெட்ட இடமாக மாற்றி,
   கடைசியில் நலிவடையச்செய்து,அரசுத்துறை
   கெட்டு விட்டது என்று கூறி
   அரசுப்பணிகளையும்,அரசுத்துறை களையும்
   அகற்றி விடும் பணியை நிறைவேற்றுவதற்கு சரியான பாதையில் செல்கிறது.....

   எப்படி
   நீர்நிலைகளை சுத்தமாகவும் முறையாக பராமரித்து, ,வாழ்வாதாரமாகவும் கருதி பேணிகாக்காமல்
   தற்போது
   தண்ணீருக்கு கையேந்தும் நிலையில் உள்ளோமோ
   அதேபோல்
   அரசுத்துறை யை லஞ்சம், அதிகாரதுஷ்பிரோயகம்,முறையற்ற பராமரிப்பு போன்ற காரணங்களால்
   சீர்இழக்கச்செய்து கடைசியில்
   அரசுத்துறை யே இல்லாமல்
   தனியார்மயமாகி சுயமரியாதை இழந்து, உரிமை, கேள்வி கேட்க முடியாமல் அடிமைநிலைக்கு சென்று விடுவோம்...

   Delete
  2. Am reply down u se last comments

   Delete
 4. Computer instructor post convertor as per government go norms pg grade 1 level.. grade pay 4600to change 4800 so pg trb exam level 1 one exam only msc with bed .. so u attent 23 june exam computer trb exam ... so u prepared exam. June 23 only. Do r .... ie so my humple regust all the best any discuse come to my wats app9600813530

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி