ஜூன் 8, 9 தேதிகளில் ‘டெட்’ தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு! - kalviseithi

May 15, 2019

ஜூன் 8, 9 தேதிகளில் ‘டெட்’ தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!


தமிழகத்தில் ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெறவேண்டும். அதன்படி, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் வெளியிட்டது. ‌தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்தது. இந்த தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் டெட் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் தாள், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. முன்னதாக, கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

 1. ஐயா வணக்கம்
  ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9ஆம் தேதியும்தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் ஜூன் 8ம் தேதி BEd படிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு உள்ளது.
  DTEd படித்துவிட்டு BEd படிக்கும் மாணவர்கள் எப்படி ஜூன் 8 ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 ஐ எழுத முடியும் ஏதேனும் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறதா இத்துடன் BEd இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை இணைத்துள்ளேன்.
  நன்றி

  ReplyDelete
 2. SRIRAM COACHING CENTRE 
  PULIANGUDI- TIRUNELVELI 
  BEST TNTET GUIDE 
  OLD AND NEW SYLLABUS(2019)
  TAMIL - 2
  ENGLISH - 1
  PSYCHOLOGY - 1 
  MAJOR - 2,
  PGTRB - TAMIL,ENGLISH,HISTORY, ECONOMICS..
  FIRST 100 PERSON ONLY 
  CELL: 86789 13626

  ReplyDelete
 3. Pls send me 1 guide in tntet science and maths

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி