எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வுக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2019

எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வுக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!


எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு மே 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்புக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு தனி பொது நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தது. இதனால், மற்ற கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்களும் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், உயர் கல்வித் துறையின் அறிவுரையை ஏற்று இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்து கல்லூரி களுக்கும் சேர்த்து‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்துவ தாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. அதோடு ஏற்கெனவே வெளியிட்டி ருந்த தனி நுழைவுத் தேர்வுக்கானஅறிவிப்பை ரத்து செய் துள்ளது.

தமிழ்நாடு ‘டான்செட்’ செய லாளர் வெளியிட்ட புதிய அறிவிப் பின்படி, எம்சிஏ படிப்புக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு ஜூன் 22-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12மணி வரையிலும், எம்பிஏ நுழைவுத் தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை4.30 மணி வரையிலும், எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் நடைபெறும்.

இதற்கான ஆன்லைன் பதிவு மே 8-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடையும்.மாணவர்கள் www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விட வேண்டும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி