Bio Metric - ஒரு நொடி என்றாலும்...! ஆசிரியர்களுக்கு அரை நாள் 'ஆப்சென்ட்'l - kalviseithi

May 16, 2019

Bio Metric - ஒரு நொடி என்றாலும்...! ஆசிரியர்களுக்கு அரை நாள் 'ஆப்சென்ட்'l


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு வரும் ஜூன் 3ல் துவங்கவுள்ளதால், பள்ளிகள்தோறும் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதுநாள் வரையில் இவர்களுக்கான வருகை பதிவேடு நோட்டு புத்தகங்களிலே பராமரிக்கப்படுகிறது.இதனால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன்கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' மெஷின் வினியோகித்து, சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், வரும் ஜூன் 3 முதலே ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூரில் முதற்கட்டமாக, கல்வி அலுவலகங்கள்,வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் பயோமெட்ரிக் மெஷின் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும் கைவிரல் ரேகைகளை பதிந்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக பயோ மெட்ரிக் கருவி பயன்பாட்டில் உள்ளது.

இருப்பினும், ஜூன் 3ல் முழுமையாக, அமல்படுத்த இருப்பதால், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா கூறியதாவது:மாதிரி பள்ளி என்பதால் ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த பிப்., மார்ச் மாதங்களிலே, 7 பயோ மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் உள்ள, 146 ஆசிரியர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.இதன்கீழ், ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.ஒரு வினாடி தாமதித்தாலும், மெஷினில் பதிவு செய்ய முடியாது.

மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கே மெஷின் செயல்பாட்டிற்கு வரும். அதன்பிறகு வருகையை பதிவு செய்யலாம். ஆனால், அரைநாள் ஆப்சென்ட் ஆகும்.மேலும், ஆசிரியர்கள் மதியம் 1:30 மணிக்குள் மதியம் வேளைக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். மீண்டும் மாலை, 4:30 மணிக்கே மீண்டும் மெஷின் செயல்படத்துவங்கும். அதன்பிறகே ஆசிரியர்கள் பணியை நிறைவு செய்ய முடியும்.

தற்போது, காலை, 9:00 முதல், மாலை, 4:10 மணி வரையில் ஆசிரியர்களின் பணிநேரமாக உள்ளது. பள்ளி நேரத்தில் மாற்றம் உள்ளதா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

6 comments:

 1. Bio metric schools ku Mattum ethuku vaikiranga...govt office,hospital la vecha people ku use ah erukum

  ReplyDelete
 2. மூன்று காலதாமதமான வருகைப் பதிவு அரை நாள் விடுப்பு என்பது அரசு விதி, இங்கு ஒரு வினாடி காலதாமதத்திற்கு அரை நாள் விடுப்பு என்பது தவறான பதிவு. இதுவரை இதுபோன்ற அரசாணை எதுவும் வரவில்லை. தவறான செய்திகளை பதிவிட வேண்டாம்

  ReplyDelete
 3. அப்படின்னா 11 மணிக்கு வரும் நாட்டாமைகளின் நிலை..

  ReplyDelete
 4. சிறப்பு ..இதேபோல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
 5. Government office 24 hours duty so bio metric vacha nallathu than 5.45 Ku oru minutes extra work nadakkathu..everyday we working up to 7 not like u....teacher need to support geo union else jaccto geo unity useless

  ReplyDelete
 6. மொத்த செய்தியில் பயோமெட்ரிக் அமல் என்பது மட்டுமே உண்மை. மற்றவை செய்தி ஆசிரியரிந் கற்பனை. பயோமெட்ரிக் அட்மின் என்ற முறையில் இதை கூறுகிறேன்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி