ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2019

ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி


சிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சேவை மையங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு தேர்வுபத்தாம் வகுப்பு,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், இந்த சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சேவை மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன. சிறப்பு தேர்வைஎழுத விரும்பும் மாணவர்கள், இந்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கானவிண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுயவிபரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை, சேவை மையங்களில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்வர்.விடுமுறையில் உள்ள சில ஆசிரியர்கள், இந்த பணிகளில், சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஊக்க ஊதியம் தரப்படும். உத்தரவுஅதாவது, விண்ணப்பிக்கும் மாணவர்களிடம், ஆன்லைன் பதிவுக்காக, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.அதில், 30 ரூபாய் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்திற்காகவும், 20 ரூபாய் பள்ளி கல்வி அலுவலகத்தின் போக்குவரத்துமற்றும் அலுவலக பணிகளுக்கும் ஒதுக்கப்படும்.இந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாக, தேர்வு துறையில் செலுத்த வேண்டும் என, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், விடுமுறையை விட்டு விட்டு, பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விடுமுறைஇந்த பிரச்னையால், விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள், அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளனர். பல மையங்களில், தலைமை ஆசிரியர்களே அமர்ந்து, தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & EDUCATION
    CONTACT :9842138560

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி