அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2019

அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்


பிளஸ் 1 பொது தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களை பிளஸ் 2 வகுப்பில் இருந்து வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.40 ஆயிரம் பேர் 'பெயில்'; அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்

தோல்வி:

பிளஸ் 1 பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2018ல் தேர்ச்சி விகிதம் 91.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2018ல் தேர்வு எழுதிய மாணவர்களில் 73 ஆயிரம் பேர் தேர்ச்சிபெறவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய எட்டு லட்சம் மாணவ - மாணவியரில் 39 ஆயிரத்து 938 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.குறிப்பாக மெட்ரிக் பள்ளிகளில் தோல்வியுற்ற 1,990 பேர்; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 38; தனியார் சுயநிதி பள்ளிகளில் 344; அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 4,786; சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உள்ள எட்டு பேர்; அரசு பள்ளிகளில் 29 ஆயிரத்து 391 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.

கோரிக்கை:

இவர்கள் அனைவரும் பிளஸ் 2வில் தொடர்ந்து படிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழகஅரசின் விதிகளின் படி பிளஸ் 1 தேர்ச்சி பெறாவிட்டாலும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பை தொடரலாம். இருப்பினும் 2018ல் இது போன்று தோல்வி அடைந்த மாணவர்களில்30 ஆயிரம் பேர் வரை கட்டாய மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.எனவே இந்தஆண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து தேர்வுத் துறையும் பள்ளிக் கல்வித் துறையும் ஆய்வு செய்து மாணவர்களின் தொடர் படிப்புக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி