ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க கோரிக்கை!


ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது பிடித்தம் செய்து வைக்கப்பட்ட சம்பளத்தை தமிழக அரசு உடனடியாக அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் கூறினர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த முத்துசாமி, நிர்வாகிகள் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடிகளுடன் இணைக்காமல் தொடக்க பள்ளிகளில் இணைக்க வேண்டும். தொடக்கக் கல்விக்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக தொடக்க கல்விஇயக்ககம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம்எடுப்பதற்கு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கென தனி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆங்கில வழிக்கல்வியில் படிக்க அதிகம் பேர் விரும்புவதால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவுகளில் வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோபோராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், பிடித்தம் செய்த சம்பளத்தை அரசு உடனடியாக ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த முத்துசாமி கூறினார்.

4 comments:

  1. நடக்கும் என்பார் நடக்காது

    ReplyDelete
  2. பள்ளிக்கு வராத நாளைக்கு சம்பளம் கேட்பதா வெக்கமாக இல்லை உங்களுக்கு...இது 7 கோடி மக்களின் வரி பணம் என்பதை மனதில் கொள்ளுங்கள் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி