அரசுப் பள்​ளி​கள் புது "டிவி' வாங்க வேண்​டும்: கல்​வித்​துறை உத்​த​ரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2019

அரசுப் பள்​ளி​கள் புது "டிவி' வாங்க வேண்​டும்: கல்​வித்​துறை உத்​த​ரவு


தமி​ழ​கத்​தில் வரும் ஜூன் மாதம் முதல் கல்​வித் தொலைக்​காட்சி சேவை தொடங்​கப்​ப​ட​வுள்​ள​தால், அரசு உயர்​நிலை, மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் புதிய தொலைக்​காட்சி வாங்​கப்​பட வேண்​டும் என பள்​ளிக் கல்​வித்​துறை உத்​த​ர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர்​க​ளுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​கு​நர் வி.சி.​ரா​மேஸ்​வ​ர​மு​ரு​கன் அனுப்​பி​யுள்ள சுற்​ற​றிக்கை விவ​ரம்:

பள்​ளிக்​கல்​வித் துறைக்​கென தமிழ்​நாடு அரசுகேபிள் தொலைக்​காட்சி நிறு​வ​னம் "அலை​வ​ரிசை 200' என்ற தடத்தை ஒதுக்​கீடு செய்து மாண​வர்​கள் பயன்​பெ​றும் வகை​யில் கல்வி நிகழ்ச்​சி​களை வரும் கல்​வி​யாண்​டில் ஜூன் மாதம் முதல் ஒளி​ப​ரப்​பத் திட்ட​மிட்​டுள்​ளது.எனவே, அனைத்து அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் உயர்​நிலை, மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் வண்​ணத் தொலைக்​காட்​சிப் பெட்டி​க​ளை​பு​தி​ய​தாக வாங்​கி​ட​வும், ஏற்​கெ​னவே உள்ள தொலைக்​காட்​சிப் பெட்டி​களை சீர் செய்து பயன்​ப​டுத்​தப்​பட வேண்​டும் என​வும் அறி​வு​றுத்​தப்​ப​டு​கி​றது.

இதற்​கான செல​வி​னங்​க​ளுக்கு பெற்​றோர்- ஆசி​ரி​யர் கழக நிதி, பள்​ளி​கள் மூல​மாக திரட்​டப்​பட்டு குவிந்த நிதி மற்​றும் இதர நிதி​களை விதி​க​ளின் படி பயன்​ப​டுத்​திக் கொள்​ள​லாம். மேலும் உள்​ளூர் அரசு கேபிள் தொலைக்​காட்சி நிறு​வ​னம் செட் ஆஃப் பாக்​ஸý​டன் இணைப்பு வழங்க வரும்​போது தலை​மை​யா​சி​ரி​யர்​கள் உரிய ஒத்​து​ழைப்பு கொடுக்க வேண்​டும் என அதில் கூறி​யுள்​ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி