திருச்சி தமிழக பண்பாட்டுக் கழகம் வழங்கிய தங்கப்பதக்கத்துடன் கூடிய ராஜகலைஞன் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்! - kalviseithi

May 6, 2019

திருச்சி தமிழக பண்பாட்டுக் கழகம் வழங்கிய தங்கப்பதக்கத்துடன் கூடிய ராஜகலைஞன் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!


திருச்சியில் தமிழகப் பண்பாட்டுக் கழகம் சார்பில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தன்னலமற்ற கல்விச் சேவைக்கு மகுடமாய் அறிவுச்சுடர் ஏற்றும் நாடு போற்றும் நல்லாசிரியர்களுக்குத் தங்கப்பதக்கத்துடன் கூடிய ராஜகலைஞன் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் விழாவானது மே 5,2019 இல் திருச்சி தேவர் அரங்கில் நடைபெற்றது. 

அவ்விழாவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த கோட்டூர் தொழில்நுட்ப குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மகிழ்வித்து மகிழ் இயக்க நிறுவனருமான முனைவர் மணி.கணேசன் என்பாரின் கல்விச் சேவையைப் பாராட்டித் தங்கப்பதக்கம் மற்றும் நற்சான்றிதழுடன் ராஜகலைஞன் விருதை திருச்சி கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன், திரைப்பட இயக்குநர் R.சுந்தர்ராஜன், நடிகர் பூவிலங்கு மோகன், நடிகை சுஹாசினி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு முதலானோர் கலந்து கொண்டு வழங்கினர். விழா ஏற்பாடுகளைத் தமிழக பண்பாட்டுக் கழகத் தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

விருதினை கஜா நிவாரணப் பணிகளைச் சிறப்புடன் மேற்கொள்ள பேருதவி புரிந்த முகநூல் நண்பர்களுக்குச் சமர்ப்பிப்பதாக விருதாளர் மணி.கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி