கலெக்டராக விரும்பிய மாணவியை வரவழைத்து, தன் இருக்கையில் அமர வைத்த, கரூர் கலெக்டர் அன்பழகன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2019

கலெக்டராக விரும்பிய மாணவியை வரவழைத்து, தன் இருக்கையில் அமர வைத்த, கரூர் கலெக்டர் அன்பழகன்


கலெக்டராக விரும்பிய மாணவியை வரவழைத்து, தன் இருக்கையில் அமர வைத்து, கரூர் கலெக்டர் அன்பழகன் பாராட்டினார். கடந்த முழு ஆண்டு தேர்வு,ஆறாம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாளில், எதிர்காலத்தில் யாராக வர ஆசைப்படுகிறீர்கள், உங்கள் முன் மாதிரி யார் என, கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு, கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி, மனோபிரியா, 'கலெக்டர் ஆக விரும்புகிறேன். என் முன் மாதிரி, கரூர் கலெக்டர் அன்பழகன்' என, பதில் எழுதியிருந்தார்.

இந்த தகவலை, பள்ளி ஆசிரியர், பூபதி, கலெக்டரின் மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி இருந்தார். அதை பார்த்த கலெக்டர் அன்பழகன், மனோபிரியாவை அழைத்து வர உத்தரவிட்டார்.இதன்படி, மனோபிரியா உள்ளிட்ட சில மாணவ - மாணவியரை, தலைமையாசிரியர், பூபதி, கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று, அழைத்து வந்தார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற, கலெக்டர், மனோபிரியாவை தன் இருக்கையில் அமர வைத்து, பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, மாணவ - மாணவியரின் கேள்விகளுக்கு கலெக்டர் பதிலளித்தார். அவர் கூறுகையில், ''வாழ்க்கையில் மறக்க முடியாத உறவு, ஆசிரியர் உறவு. அதை எப்போதும் மறக்கக் கூடாது,'' என்றார்.

2 comments:

  1. விளம்பரம் மிக முக்கியம் மன்னா. கல்விதுறையில் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி