சம்பளத்தை நிறுத்தினால் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு - kalviseithi

May 7, 2019

சம்பளத்தை நிறுத்தினால் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு


தகுதித் ேதர்வை காரணம் காட்டி, 1500 ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம்முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே நிபந்தனை விதித்துஇருந்தது. இதுவரை 4 முறை வாய்ப்பு வழங்கப்பட்டும் 1500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் அவர்களின் ஏப்ரல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் செய்வது தொடர்பாக பல்வேறு அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணியின் பொதுச் செயலாளர் மயில், நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த 23.8.2010க்கு பிறகு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை கூறி அவர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்கக் கூடாது. 8 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றிய பிறகு அவர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அச்சுறுத்துவதும் நியாயமற்ற செயல். அரசு அறிவித்தபடி தகுதி தேர்வை நடத்தாமல் போனதும் ஒரு காரணம். இந்த ஆசிரியர்கள் முறையாக ஆசிரியர்பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள். எனவே தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.

போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தகுதி பெற்று வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போரை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஜூன் 7ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 comments:

 1. Don't say the word strike.peoole laugh at teachers

  ReplyDelete
 2. உங்களுக்கு சம்ளம் இல்லைண்ட மட்டும் போராட்டம் அப்பவே தகுதி தேர்வு வேண்டாம் என்று போராடியிருக்கலாமே

  ReplyDelete
 3. எவ்வளவு வாய்ப்புகள் வழங்கினாலும் இவர்கள் தேர்ச்சி பெறப்போவதில்லை

  ReplyDelete
 4. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களையும்
  பணி நீக்கம் செய்யவேண்டும்...

  ReplyDelete
 5. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை
  அவமதிக்கும் வகையில்
  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து
  போராட்டம் நடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

  கடந்த நான்கு தேர்வுகளில்
  ஒருமுறை கூட தேர்ச்சி பேற
  துப்பில்லாமல்
  இப்போது புலம்புவது ஞாயமற்றது.

  ReplyDelete
 6. இப்படியே நீங்கள் ஜால்ரா எடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்

  ReplyDelete
 7. இனிமேல் அறிவு இருக்கிறவன் தான் ஆசிரியர் ஆக முடியும்.......ஜாதி....குறுக்கு வழியை மூட்டை கட்டி முன்னேற பாருங்க.....அப்போதான் ஆசிரியர்களுக்கு உண்டான மரியாதை கிடைக்கும்......புது பாட திட்டத்தை பார்த்து மாணவர்களை விட, இப்போது அரசு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்தான் பயப்படுவதாக கேள்வி.....காரணம் ஏதாவது ஒரு ரூபத்தில் உள்ளே வந்து விட்ட சில முட்டாள்கள் ஆசிரியர் தொழிலையே கெடுக்கின்றார்கள்.....

  இனி இந்த தவறு நடக்க கூடாது.....

  ReplyDelete
 8. Avanunga exam eluthura idea la illa.. enkita oruthan sollirukan, nanga eppadiyum jeyippomnu.
  Kasu kuduthu velai vangirukanla...
  Tet pass panni 94k makkal summa irukanga.. ivanunga pass panna vakku illama vetti scene podranunga...

  ReplyDelete
 9. பணம் சம்பாதிக்க வேனும்னு காசு கொடுத்து வேலை வாங்குனவங்க தான நீங்க?

  சம்பாரிச்சது போதும்.
  போயி வேற வேலைய பாருங்க.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி