தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவியை பறிக்க தொடக்க கல்வித்துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவியை பறிக்க தொடக்க கல்வித்துறை முடிவு.



இனி துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்ற பதவி இருக்காதாம். துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் அப்பள்ளியின் மூத்த இடைநிலை ஆசிரியராகவே கருதப்படுவார். நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்... பட்டதாரி ஆசிரியராகவே கருதப்படுவார். தலைமை ஆசிரியர் என்ன சப்ஜெக்ட்டோ அதே சப்ஜெக்ட்டில் அந்த நடுநிலைப் பள்ளியில் இன்னொரு பட்டதாரி ஆசிரியர் இருந்தால் அந்த சப்ஜெக்ட் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். BEO போஸ்ட் என்ன செய்யப்படும் என்பது ஓரிரு நாளில் தெரியவரும். தற்போது பள்ளிகளுக்கு இலவச நலத்திட்டங்களையே BEO வழங்கமாட்டாராம், DEO தான் வழங்குவாராம்.

8 comments:

  1. சோதனை மற்றும் வேதனை காலம்....

    ReplyDelete
  2. காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இது போன்ற சவால்கள் வரலாம்,இன்னும் கொஞ்ச நாளில் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதிலாக அதி நவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கற்பிக்கும் ரோபாட்கள் களமிறக்கப்படல. இதட்கான சோதனை ஓட்டத்தை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தொடங்கிவிட்டார், வருங்காலத்தில் எல்லாத்துக்குமே ரோபாட்கள்தான், ஆசிரியப்பணி, பொறியாளர் பணி, மருத்துவப் பணி யாவற்றிற்கும் ரோபாட்கள்தான்..அரசுப்பணியில் இருப்பவர்கள் நல்ல சைடு பிஸினஸ் ஆக ஆரம்பித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  3. தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா? பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களே.

    ReplyDelete
  4. இப்படியே எல்லா போஸ்டிங்குகளையும் காலி பண்ணி, அவுட் சோர்சிங் முறையில் கொடுத்து (7000 ரூபாய்க்கு) இளைஞர்களின், படித்தவர்களின் வேலை வாய்ப்புகளைக் கெடுத்து, எதி்காலத்தையும் கேள்விக்குறியாக்கி நன்கு விளையாடுங்கள். அதிக வருமானம் ஈட்டும் வகையில் எல்லா வரிகளையும் உயர்த்துங்கள். எல்லா சான்றிதழ்களையும் பணம் கட்டினால் தான் கிடைக்கும் என்று திட்டம் கொண்டுவாருங்கள். மக்கள் நாசமாக போகட்டும். நீங்கள் நன்றாக செழிப்போடு வாழுங்கள்.

    ReplyDelete
  5. Kalviseithi admin unmayana thagavalai matum podavum ithu fake news.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி