RTE 25 % - காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2019

RTE 25 % - காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா?


இன்றைய 30.5.19 தினமணி செய்தி நறுக்கில் முழுச்செய்தியும் மக்கள் வாசிப்பதற்கு ..கடைசி  இரண்டு வரிகள் மக்கள் சிந்திப்பதற்கு.

மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி  :
● ஒரு லட்சம்  மாணவர்கள் தனியார் பள்ளிகளில் நாளை 31.5.19 ல் சேர்க்கப்படுகின்றனர்.
● இந்த ஒரு லட்சம்  மாணவர்கள் எல்கேஜி யிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, அதாவது பத்தாண்டுகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. (அது சேர்ந்த பிறகு தெரியும் )

இநத செய்தியில் மறைந்திருக்கும் நான்கு அதிர்ச்சி செய்திகள்

☆ ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை அரசே மடைமாற்றி தனியார் பள்ளிகளுக்கு வழியனுப்பி வைக்கிறது .

☆ இதனால்  3500 புதிய  அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு கள்ளிப்பால் ஊற்றப்படுகிறது.   அரசு ஆசிரியர் பணி கிடைக்கும் என்று  பி.எட் ஆசிரியர் பயிற்சி பயிலுகின்ற , பயின்று காத்திருப்பவர்கள் கனவுகளில் மண். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடைசி தலைமுறை இதுதான். அழிந்து போன இனமாகிவிடும்.

☆ 1500 அரசுப் பள்ளிகளுக்கான ஆக்சிஜன் பிடுங்கப்படுகின்றது.  விரைவில் அந்த பள்ளிகளுக்கு மூடு விழா தான்.

☆ ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்  கூடுதலாக தனியார் பள்ளி  அதிபர்களின் பாக்கெட்டுக்கு அரசே சுலபமாக கொடுக்கிறது.

விளைவுகள்
■ எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளே இருக்காது. தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பது தான் கட்டணம் .வைத்தது தான் சட்டம்.
■ விளிம்பு நிலை மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் கல்வி மறுக்கப்படும்.

பசப்புகள்
⊙ ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கொல்லைப்புறமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு,  அரசுப்பள்ளிகளில் ஏன்  மாணவர்  சேர்க்கை குறைந்துவிட்டது என ஒன்றும் அறியாதது போல் விளக்கம் கேட்பது.

⊙ சுளையாக மக்கள் வரிப்பணம்  200 கோடியை தனியார் பள்ளிகளுக்கு கொடுத்து விட்டு  அரசுப் பள்ளிகளை கட்டமைக்க யாராவது தத்தெடுக்க வேண்டுகோள் விடுப்பது.

எதிர்காலம் எப்படி போனால் நமக்கென்ன?   ஐபிஎல், பிக்பாஸ்  பாத்து காலத்தை கழிப்போம்.

30.5.19

7 comments:

  1. Yes. The government itself destroys govt schools and it should improve the standard of the govt schools instead of implementing RTE.

    ReplyDelete
  2. தற்போது சர்ப்ளஸ் என்ற நடவடிக்கை தொடங்கியாச்சு. இனி போடும் போஸ்டிங்குகளும் அவுட்சோர்சிங் தான். அதுவும் தனியாரை விட சொற்ப சம்பளம் தான் (7000). தனியார் எந்த வித அரசுப்பணமும் இல்லாமல் 25 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று இந்த அரசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் வண்ணம் 200 கோடி பணம் ஒதுக்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் (ஓட்டலில் சாப்பிடுவதற்கும் நம் தலையில் வரி, வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் வரி அந்த வரிக்கும் வரி) என்று வரி வரி என்று வசூலித்து இந்த பணமெல்லாம் எங்கே போகிறது, பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர்கள் உதவ வேண்டும் என்கிறார்கள். வேலைவாய்ப்பையும் கெடுத்து பள்ளிகளையும் மூடி என்ன சாதிக்கப்போகிறார்கள்?

    ReplyDelete
  3. எல்லாம் பக்கா ப்ளான்,
    கார்பரேட் யுத்தி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி