பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம் - kalviseithi

Jun 25, 2019

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம்


பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்வது தொடர்பான அரசாணை கடந்த வெள்ளிக் கிழமை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையில், பல்வேறு தகவல்களை அரசின் பள்ளிக்கல்வி துறை பதிவு செய்து இருந்தது. அதில் ஒன்றுதான், குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்பதுஆகும். நகர்ப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 30 மாணவர்கள், கிராமப்புறத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது.

அந்த பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருந்த பாடப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது 50 சதவீதத்துக்கும் மேலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த திட்டத்தால் கிராமப்புற மாணவர்களின் படிப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். கிராமப்புறத்தில் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் இடைபட்ட தூரம் என்பது 10 முதல் 20 கிலோ மீட்டர் அளவில்இருக்கும் என்பதால், அந்த மாணவர்கள் படிப்பை தொடரமுடியாமல் கூட போக வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள்தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியதாவது:- அரசின் இந்த செயல் திட்டம் அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்துவதாக தெரியவில்லை என்றும், மாறாக தனியார் பள்ளிகளை வளர்த்துவிடுவதற்கும், கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் நோக்கிலும் இருக்கிறது. கிராமப்புறத்தில் இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் அப்போதெல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. நகர்ப்புறத்தில் இந்த பாதிப்பு குறைவாக தான் இருக்கும். குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ரூ.100 கோடி மானியத்தில் மாணவர்களை சேர்க்க துடிக்கும் அரசு, நம்முடைய அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

6 comments:

 1. Education department and defense expencex are , investment and security for our country. Don't try to reduce expenses in both department. We are not give quality education to our children, they are become drinker or criminals. Plz it's sensitive issue , so discussed tamilnadu educationalists and decide. Thank you.

  ReplyDelete
 2. இதன் நோக்கம் பாமர மக்களுக்கு வேண்டுமானால் தொியாமல் இருக்கலாம்,
  ஆனால் ஆசிாியா்கள் கட்டாயம் தொிந்துகொண்டு சிலபேருக்காவது
  எடுத்துரைக்கவேண்டும்...
  18 வருடங்களுக்கு முன்பு அரசுப்பள்ளிகளின் மாணவா்சோ்க்கையை குறைக்க, முதல்படியாக அதன்தரத்தை
  இழக்கச்செய்ய நடைமுறைப்படுத்தப்பட்டதே. அனைவருக்கும் கல்வி இயக்கம்...
  இதனடிப்படை கற்பித்தல் வாயிலாக
  தொடக்க பள்ளி மாணாக்காின்
  வாசிப்பு திறன் (தமிழ்) சாகடிக்கப்பட்டது, இதன் காரணமாகவே பெரும்பாலான பெற்றோா் தம் பிள்ளைகளை தனியாா் பள்ளிக்கு அனுப்பவேண்டியதாயிற்று,
  இதில் கொடுமையான உண்மை என்ன தொியுமா? தொடக்கப்பள்ளி ஆசிாியா்கள்யாரும் கல்வித்துறையின்
  இந்த சதிக்கு எதிராக குரல் எழுப்பவோ, வாய்திறக்கவோ இல்லை
  மாறாக அ.க.திட்டத்தை புகழ்ந்தே பேசினா், காரணம்....???

  ReplyDelete
  Replies
  1. உண்மை .. தமிழகத்தை அழிக்க அதன் கல்வி மருத்துவம் இரண்டையும் அழிக்க நினைக்கிறது இந்திய அரசு ...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி