10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் - kalviseithi

Jun 1, 2019

10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்


வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் சில இடங்களில் குறைந்துள்ளது.

இதுவரை வெயில் கடுமைகாட்டிய இடங்களான வேலூர், திருத்தணியில் நேற்று108 டிகிரி வெயில் நிலவியது. மதுரை, கடலூர் 104 டிகிரி, திருச்சி, சேலம், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, சென்னை 102 டிகிரி வெயில் நிலவியது. பிற  இடங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 60 மிமீ மழை பெய்துள்ளது. ஒசூர், போச்சம்பள்ளி 50 மிமீ,  கரூர், வேம்பாவூர் 30 மிமீ, தர்மபுரி, கொடுமுடி, பெரம்பலூர், கோபிச்செட்டிப்பாளையம், கரூர் பரமத்தி, சத்தியமங்கலம் 20 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் நீடிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் கூடுதலாக 4  டிகிரி செல்சியஸ் வரை வெயில்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி