அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11-ம் வகுப்பிலேயே நீட் பயிற்சி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை - kalviseithi

Jun 11, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11-ம் வகுப்பிலேயே நீட் பயிற்சி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11-ம் வகுப்பிலேயே நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர்கூட முதல் முறையாக நீட் தேர்வின்மூலம் மருத்துவப் படிப்பிற்கு செல்லும் தகுதி பெறவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வேதனையளிக்கிறது.

படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 5-ம் தேதிவெளியிடப்பட்டன. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,23,078 பேரில், 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் நீட் தேர்வில் பெற்றுள்ளனர் . ஆனாலும் ஒருவர்கூட மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கும் அளவிற்கு மதிப்பெண் பெறவில்லை என்பது மற்றுமொரு அதிர்ச்சி.  இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையற்றவர்கள் என்பது அர்த்தமில்லை.1 முதல் 12 -ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அப்பாடங்களில் இருந்து நீட் தேர்வில் வினாக்கள் கேட்டால் சுலபமாக வெற்றி பெற முடியும். மாறாக 1 முதல் 12 ஆம் வகுப்புவரை சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்களுக்கு அதே பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் எளிதில் வெற்றி பெறுகின்றனர்.தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி அளித்தும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே புதிய பாடத்திட்டம் தற்போது சிறப்பாகவும் சிபிஎஸ்இக்கு நிகராகவும் உள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராக முடியும்.ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவினை உண்மையாக்கிட நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதே நிரந்தரத் தீர்வாகும். அதுவரை குறைந்தபட்சம் பதினோறாம் வகுப்பிலேயே நீட் தேர்விற்கான பயிற்சியினை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை  தொடங்கிடவேண்டும்'' என்று இளமாறன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி