மத்திய பொதுத்துறை வங்கிகளில் காலி பணியிடங்களை பொதுதேர்வுகள் மூலம் நடத்தும் ஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி-2019 (IBPS RRB 2019) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான வங்கி அலுவலக உதவியாளர் பணி, அதிகாரி பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
மொத்தம்-12,000 காலியிடங்கள்
அதிகாரி பணி ஸ்கேல் I - 4856
அதிகாரி பணி ஸ்கேல் II - 1746
அதிகாரி பணி ஸ்கேல் III - 207
அலுவலக உதவியாளர் பணி -7373
தேர்வு நாள்:
ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2019 தேர்வின் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதில் ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2019 அதிகாரி பணி ஸ்கேல் I,II, III தேர்வின் முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 3, 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முதன்மைத் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்கேல் II மற்றும் ஸ்கேல் III அதிகாரிகளைத் தேர்வு செய்ய ஒரே தேர்வாக செப்டம்பர் 22ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2019 அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் 17, 18, மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது.
வயது வரம்பு:
அதிகாரி பணி ஸ்கேல் IIIக்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அல்லது 03.06.1979 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது. ஸ்கேல் II அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அல்லது 03.06.1987 க்கு முன்போ 31.05.1998க்குப் பின்போ பிறந்திருக்கக்கூடாது. ஸ்கேல் I அதிகாரி பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் அல்லது 03.06.1989 க்கு முன்போ 31.05.2001க்குப் பின்போ பிறந்திருக்கக்கூடாது.
வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் அல்லது 02.06.1991க்கு முன்போ 01.06.2001க்குப் பின்போ பிறந்திருக்கக்கூடாது.
வயது தளர்வு:
ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி (IBPS RRB 2019) தேர்வில் எஸ்சி, எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் கணவனை இழந்த விதவைகளுக்கு 9 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி