தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 1,850 இடங்களுக்கு 392 பேர் மட்டுமே விண்ணப்பம் - kalviseithi

Jun 30, 2019

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 1,850 இடங்களுக்கு 392 பேர் மட்டுமே விண்ணப்பம்


தமிழகத்தில் 1,850 தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்புக்கான இடங்களுக்கு வெறும் 392 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள் ளனர்.

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித் தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் அரசால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1,850 இடங்களுக்கு வெறும் 392 பேர் மட்டுமே விண் ணப்பித்துள்ளனர். 2019-20ஆம் ஆண்டின் தொடக் கக் கல்விஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற் கான விண்ணப்பங்கள், ஜூன் 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை, தகுதியானமாணவர்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்டன.

இந்தப் படிப்பில் சேருவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 விழுக்காடும், மற்ற பிரிவினருக்கு 45 விழுக்காடும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற் றும் பயிற்சி நிறுவனங்களில்1,070 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்க | ளும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் உள்ளன.

 இந்த இடங்களில் சேர்வ தற்கு கடந்த 24-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 392 மாணவர்கள் மட்டுமே தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பில் சேருவ தற்கு விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி