19,426 பேருக்கு கட்டாய பணிநிரவல். ஆனால் நிர்வாக மாறுதலுக்கு மட்டும் எப்படி பணியிடம் இருக்கிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2019

19,426 பேருக்கு கட்டாய பணிநிரவல். ஆனால் நிர்வாக மாறுதலுக்கு மட்டும் எப்படி பணியிடம் இருக்கிறது?

2019-20 ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியவாறு நிர்வாக மாறுதல் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாகவும் அவர்கள் கட்டாய பணிநிரவல் செய்யப்படுவார்கள் எனவும் கூறும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பல லட்சங்களை பெற்றுக்கொண்டு தென் மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வாறு பணிமாறுதல் வழங்குகிறது. தென் மாவட்டங்கள் அனைத்திலும், அனைத்து பாடங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் இருக்கும்போது நிர்வாக மாறுதலுக்கு மட்டும் காலியிடம் எப்படி வருகிறது என அதிகாரிகள் விளக்கினால் நன்று. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் கேள்விக்கு விடைதருமா பள்ளிக்கல்வித்துறை. 

2 comments:

  1. Kaasu dhuttu panam money money . Nee ketta kelviku ethan artham

    ReplyDelete
  2. எல்லாம் காந்தி நோட்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி