எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள்  - kalviseithi

Jun 12, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள் 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைனில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர். இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

 தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த7-ம் தேதி முதல் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து நேரிலோ தபால் மூலமாகவோ சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா நெடுஞ்சாலையில் இயங்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதிகாரிகள் கூறிய தாவது:கடந்த ஆண்டு 28 ஆயிரம் பேர் வரும் 20-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம். நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம். கடந்த ஆண்டு சுமார்28 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு இதுவரை ஆன் லைனில் 45,026 பேர் விண்ணப் பித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் 35,386 பேர் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்னும் 8 நாட் கள் காலஅவகாசம் இருப்பதால், இந்த எண்ணிக்கை 50 ஆயி ரத்தை தாண்டும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. ஜூலை 2-ல் தரவரிசை பட்டியல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப் படுகிறது. முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுஜூலை 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளில் சிறப்பு பிரிவு மற்றும் பெருந்துறை ஐஆர்டி கல்லூரி யின் தொழிலாளர்களின் வாரிசு களுக்கான கலந்தாய்வும் 5-ம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வும் தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் திரும்பக் கிடைத்ததும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர். தமிழகத்தில் 23 அரசு மருத் துவக் கல்லூரிகளில் 3,250 இடங் கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 506 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,744 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசுக்கு உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் சாலைப் போக்கு வரத்து தொழிலாளர்களின் வாரிசு களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி (ஐஆர்டி) இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 15 இடங் கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 30 இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.

மீதமுள்ள 55 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல், சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இவைதவிர தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி