நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சகம் நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:-
மத்திய பாதுகாப்பு படையில் வீரர்கள் பணி ஓய்வு, கட்டாய ஓய்வு, பணியின் போது இறப்பு போன்ற காரணங்களால் தற்போது 84 ஆயிரத்து 37 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை துரிதமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-16-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 268காவலர் காலி பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி 2017-ம் ஆண்டு காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 58 ஆயிரத்து 373 காவலர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
அதேபோல் கடந்த ஆண்டில் 1,094 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு 466 உதவி கமாண்டண்ட் காலி பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டுக்கு 323 உதவி கமாண்டண்ட் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி