புதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வினை 9408 பேர் எழுதினார்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல். - kalviseithi

Jun 9, 2019

புதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வினை 9408 பேர் எழுதினார்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.


புதுக்கோட்டை,ஜீன்.9: புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில்  ஆசிரியர் தகுதித் தேர்வு  இரண்டாம் தாள்  தேர்வினை 9408 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினார்கள்.விண்ணப்பித்தவர்களில் 1082 பேர் தேர்வெழுத வரவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறினார்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டம் பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது:இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9408    பேர் முதல் தாள் தேர்வினை எழுதினார்கள்.விண்ணப்பித்தவர்களில் 1082 பேர் தேர்வெழுதவரவில்லை.

இதில்  அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஆவுடையார் கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சுப்ரமணியபுரம்,அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மணல்மேல்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபரபள்ளி,லெட்சுமிநரசிம்மபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி   ஆகிய 9 மையங்களில்  மொத்தம் 2766 பேர் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதில் 298 பேர் தேர்வெழுத வரவில்லை.2468 பேர் தேர்வெழுதினார்கள்.

அதே போல் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் ஒரே தேர்வு மையமான கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,பொன்புதுப்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 3 மையங்களில்  924 பேர் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதில் 76 பேர் தேர்வெழுத வரவில்லை.848 பேர் தேர்வெழுதினார்கள்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரிமளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,சிவபுரம் கற்பகவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ,புதுக்கோட்டை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெருங்களூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருமயம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கறம்பக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை திரு இருதய மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை அருள்மிகு பிரகாதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருமயம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 21மையங்களில் மொத்தம் 6800 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்..இதில் 708 பேர் தேர்வெழுத வரவில்லை.6092 பேர் தேர்வெழுதினார்கள்.

மேலும் தேர்வெழுதுபவர்கள் காப்பியடித்தல் போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.செல்போன்,கால்குலேட்டர் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .மேலும் தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

20 comments:

 1. சுத்தியலால் மண்டையில் அடிபட்டிருந்தபோதும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டை எழுதச் சென்ற நேசமணி அவர்கள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சைக்காலஜியின் கடின வினாக்களைக் கண்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தார்...

  ReplyDelete
 2. Evanda question edukiringa p2

  ReplyDelete
 3. Pongada neengalum unga testum first ministergu inntha mathiri test vachu select pannanum

  ReplyDelete
 4. Vaalga question edukravan

  ReplyDelete
 5. தமிழகத்தில் நீட் ஒழிப்பிற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்கள்,டெட் தேர்வை ஒழிக்க ஒலிக்காதா.. 😭😭

  ReplyDelete
 6. அமைச்சர்கு ஏன் Elgiblity test வைக்கக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. இந்த பையலுக்கு மட்டும் எப்படி தான் கேள்வி கிடைக்குதோ.நம்ம கண்ணுக்கு சிக்கமட்டுதே!
   தைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைை்ைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைை்ைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைை்ைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைை்ைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைை

   Delete
 7. 'BANN TET'oru wtsapp grp start pannunga natpugale😁

  ReplyDelete
 8. Collector only visit....velai koduka solli kelunga athu thuppu kidayathu 2013,2017,2019

  ReplyDelete
 9. 2013 passed candidates ku innum one year than Tet certificate valid athukulla posting poda vaipum illai apram eathuku exam , question pap Vera tough ithula next niyamana thervu Vera ?? Engala pola correspondent course padichu Tet 2013 & 2017 la pass pannitu ippoyum mark increase aganum nu exam eazhuthi wait panravangaluku intha . Govt eppothan oru niyayamana theervu tharum?????

  ReplyDelete
 10. பாடத்திட்டம் 6,7,8 ஆனால் கேட்கப் பட்டது வினா கல்லூரி அளவில் உள்ளது நம் தலைவிதி பணம் இல்லை இல்லை என்றால் வழக்குத் கொடுப்பேன்.சனியனே எங்கிருந்து தான் வினாத்தாள் எடுக்கிறாயோ. நல்லாவே இருக்க மாட்டாய்

  ReplyDelete
 11. Good news to 2013tet passed candidate s. 2019 Tet tough.

  ReplyDelete
 12. Private school la salary increase panuna. Yarum tet edhir parka matanga. So private school teachers salary kaga poraduvom.

  ReplyDelete
 13. Indha question paper eduthavan nasama poiduvan

  ReplyDelete
 14. Yes group start pannunga appathan namma problems pesamudium

  ReplyDelete
 15. Namakka tet exam alla.1500 teachers amount vangi vittu avarakalai pass panni vaika vendum athan Intha tet exam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி