அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2019

அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு


ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வரும் 7ம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் அறிக்கை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்காக போராட்டங்கள் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.திடீர் இடமாறுதல்களை ரத்து செய்து ஆசிரியர்களுடன் சுமூக உறவை அரசு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்களை பணிநிரவல் முறையில் மாற்றுவதை ரத்து செய்து, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை ஏற்படுத்த வேண்டும்.தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அரசு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். 2011 நவ. 15க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. மே மாதம் அனைவரும் சும்மாதானே இறுதிங்க அப்ப போராட்டம் நடத்தாமல் இப்ப பள்ளிகள் தொடங்கீயுதுமே போராட்டம் நடத்து கின்றிரே இது உங்களுக்கு அசிங்கமா இல்லை...உங்களை போன்ற பட்சோந்திகளை உடனடியாக இந்த அரசு வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்...இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் களத்தில் இறங்கி போராடவேண்டி வரும்..

    ReplyDelete
  2. இவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த விதம் பற்றி அரசு முழுவதுமான ஆய்வு நடத்த வேண்டும்...

    ReplyDelete
  3. இப்ப வாங்குன அடி பத்தாது போல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி