பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் முடக்கம்: புகார் அளித்தால் நடவடிக்கை - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல் - kalviseithi

Jun 30, 2019

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் முடக்கம்: புகார் அளித்தால் நடவடிக்கை - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்


பணியில் சேரும் பேராசிரியர்களின் அசல் சான் றிதழ்களை கல்லூரிகள் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுப்பதாக இதுவரை எந்தவொருபுகாரும் அரசுக்கு வரவில்லை என உயர் கல் வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக பிரிவுக் கல்லூரிகளில் ஒன்றான குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் வேலைவாய்ப்பைப் பெற்ற பேரா சிரியர் வசந்தவாணனுக்கு, அவருடைய அசல் கல்விச் சான்றிதழ் களை அவர் முன்னர் பணிபுரிந்த சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தரமறுத்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பிரச்னை மிகப் பெரிய சர்ச்சையை ஏற் படுத்தியது. இதையடுத்து, பணியில் சேரும் பேராசிரியர்களிடம் அசல் கல் விச் சான்றிதழ்களை வாங்கி முடக்கி வைக்கக் கூடாது என பொறி யியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ மீண்டும் அறிவுறுத்தியது. அதேபோல், பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) ஏற் கெனவே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்தபோதும், பேராசிரியர்களிடம் இதுபோல அசல் சான்றி - தழ்களை வாங்கி முடக்கி வைப்பதை கல்லூரிகள் தொடர்ந்து வரும் ) வதாக புகார் எழுந்துள்ளன.பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி கலை-அறிவியல் கல்லூரிகளும் இந்த நடைமுறையை இப்போது பின்பற்றி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை .

 இதன் மீது அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிப்பதால், பேராசிரி யர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கி ழமை நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப் பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது: பணியில் சேரும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்களை கல் லூரிகள் வாங்கி முடக்கி வைப்பதாக தமிழக அரசுக்கு இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை.

எனவே, இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரி மீது அரசு நடவ டிக்கை எடுத்து, அசல் சான்றிதழ்களை திரும்பப் பெற்றுத் தருவதற் கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றார் அவர்.

1 comment:

  1. யோவ் அன்பழகா இல்லாவிட்டால் நீ புடுங்கிடுவ மயிர.பிராடு பயலே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி