புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்பு.. - kalviseithi

Jun 30, 2019

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்பு..


புதுக்கோட்டை,ஜீன்.30: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இரா.வனஜா 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி  முதல் பணிபுரிந்து வந்தார். தற்போது 58 வயது பூர்த்தி அடைந்து  விட்டதால் ஜீன் 30 ஆம் தேதி ஒய்வு பெற்றார்.

எனவே புதியதாக கூடுதல் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி அவர்களிடம் புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பொறுப்பை ஒப்படைத்தார்.அவரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக பணிஓய்வு பெறும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜாவிற்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்..பதிலுக்கு அவரும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தியிடம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நிகழ்வின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) இரா.சிவக்குமார் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன்,பள்ளி துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி,ஜெயராமன்,செல்வம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள் ,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி  அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்  அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி