மருத்துவ கவுன்சிலிங் பதிவு அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2019

மருத்துவ கவுன்சிலிங் பதிவு அவகாசம் நீட்டிப்பு


பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மற்றும் நீதிமன்ற விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கவுன்சிலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகள் நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைகளில் 15 சதவீதஎம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். இடங்கள் அகில இந்தியகவுன்சிலிங்கில் நிரப்பப்படுகின்றன.

இதற்கான 'ஆன்லைன்' கவுன்சிலிங் இந்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி சார்பில் www.mcc.nic.in என்ற இணையதளம் வழியே நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்யும் அவகாசம் நேற்று மாலை 5:00 மணிக்கு முடிவதாக இருந்தது. இந்நிலையில் முதல் சுற்றுக்கான கவுன்சிலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பொது மருத்துவ சேவைகள் இயக்குனரகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல் சுற்று மருத்துவ கவுன்சிலிங்கில் டில்லி இந்திர பிரஸ்தா பல்கலையின் கல்லுாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் வழங்குவது குறித்து சில பிரச்னைகள் எழுந்துள்ளன.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016 மற்றும் 2017ல் தொடரப்பட்ட வழக்கின் அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த காரணங்களால் நேற்று முடிவதாக இருந்த விருப்ப கல்லுாரி பதிவு மற்றும் மாணவர்களின் புதிய பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைனில் விருப்ப கல்லுாரிகளின் பதிவை மேற்கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி