பள்ளிகளில் யோகா தினம் கொண்டாட மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2019

பள்ளிகளில் யோகா தினம் கொண்டாட மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தல்


பள்ளிகளில் ஜூன் 21-ம் தேதி யோகா தினம் கொண்டாட மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவை சிறப்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கிய நாடுகள் சபை உத்தரவின்படி சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஜூன் 21-ம் தேதி யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் யோகா சார்ந்து சிறப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடுமாறு மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்துவிதமான பள்ளிகளிலும் யோகா தினத்தை நிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியம்உட்பட போட்டிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி