உபரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2019

உபரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு


உபரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடுநிலைப்பள்ளி வளாகங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கு பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. அரசு உதவிபெறும்பள்ளிகளில் இருந்து நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருந்தால், அந்த பள்ளிகளுக்கு கூடுதலாக தலா ஒரு பணியிடம் வழங்க வேண்டும்.

அவ்வாறு அனைத்து பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட பின், ஒட்டுமொத்த மாவட்டத்தின் காலி பணியிடம் மற்றும் தேவை சேர்த்து, மாவட்டத்திலுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ, கூடுதலாகவோ இருந்தாலோ வேறு எந்த பள்ளிக்கும் needed கலம் பூர்த்தி செய்யக்கூடாது. neededகலம் பூர்த்தி செய்வதை முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி