சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி,கையுறை அடங்கிய சுகாதார பேழைகள்: விநியோகம் உணவின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2019

சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி,கையுறை அடங்கிய சுகாதார பேழைகள்: விநியோகம் உணவின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை


சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி, சோப்பு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சத்துணவு மையங்களில்பள்ளி மாணவர்களுக்கு தக்காளி, லெமன், சாம்பார் சாதம் உள்ளிட்டவை மதிய நேரங்களில்விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் சத்துணவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.1.73 கோடி செலவில்...

சத்துணவு மைய பணியாளர்களின் சுகாதாரத்தினை கடைப்பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.1.73 கோடி செலவில் சுகாதார பேழைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.இதன் அடிப்படையில், சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ.400 செலவில் சோப்பு, நகவெட்டி, துண்டு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதார பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரி விளக்கம்

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பணியாளர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார பேழைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சத்துணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் கையுறைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சுகாதாரம் பேணி காக்கப்படுவதன் மூலம் உணவின் தரம் பாதுகாக்கப்படும்இவ்வாறு சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி