பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை: மாணவர்கள் பாடச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு திட்டம் - kalviseithi

Jun 14, 2019

பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை: மாணவர்கள் பாடச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு திட்டம்


பொதுத்தேர்வு முறைகளில் மாற் றம் கொண்டுவரவும் மாணவர் களின் பாடச்சுமையைக் குறைக்க வும் தமிழக அரசு பரிசீலனை செய்துவருகிறது.

புதிய பாடத் திட்டம் அதிக அளவு இருப்பதால் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அறிவியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை பெரிதும் குறைந்து வருகிறது. இதைச் சீரமைப்பதற்கான முயற்சி களில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.அதன்படி பொதுத் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு பரிசீலனை செய்துவருகிறது.இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதிய பாடத்திட்டம் அதிகம் இருப்பது மாணவர்களுக்கு கூடு தல் சுமையாக உள்ளது.

இதனால், 11, 12-ம் வகுப்புகளில் மொத்த முள்ள 6 பாடங்களை 5 பாடங் களாக குறைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.அதன்படி மேல்நிலை வகுப்பு களில் பொறியியல், மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கு தனிப்பாடப் பிரிவு வழங்க முடிவாகியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு தயாராகும் மாண வர்களுக்கு தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல் என 5 பாடங்கள் படித்தால் போதுமானது.அதேபோல் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய 5 பாடங் களைப் படிக்க வேண்டும்.

இந்தமுறை அமலுக்கு வந்தால் மொத்த மதிப்பெண்600-ல் இருந்த 500 ஆகக் குறையும். இதேபோல்,பத்தாம் வகுப்பிலும் மொழிப் பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்தவும், மாணவர்களின் பாடச்சுமையை குறைத்து வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரவும் பரிசீலனை செய்துவருகிறோம்” என்றனர்.

1 comment:

  1. எவன் தான் ஐடியா கொடுக்குறானோ.!? தெரியல.!?
    . பர்ஸ்ட் சிலபஸ் சரியில்லை சிஸ்டம் சரியில்லை என்று மாத்துறான்.!? இப்போ அதுவே, அதிகமாக இருக்குனு பாடத்தை குறைக்குறான்.!? ஏன் இதுவரையில் மாணவர்களுக்கு சுமையே இல்லையா..!? இல்லை இதுவரையில் எவனும் 12 ம்வகுப்பு படிச்சதில்லையா.!?? ஆக First குரூப் எடுத்து படிச்ச பசங்க, மருத்துவம் பொறியியல் என்ற இரு choice இருக்குறது பொறுக்கல‌.!??.,
    நல்லா வரூவீங்க..!?, ம்ஹூம்..!?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி