காஞ்சிபுரம் - பள்ளிகளின் வேலை நேரம் குறைப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2019

காஞ்சிபுரம் - பள்ளிகளின் வேலை நேரம் குறைப்பு !


காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, அங்கு பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ள அத்திவரதர் விழாவை காண, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மட்டும் 48 நாட்களுக்கு பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் பள்ளிகள், ஜூலை 1 - ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை, காலை 8.30 மணி முதல் மதியம் 1.30வரை செயல்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி