புதிய பாடப்புத்தகங்களில் இருந்த தேவையில்லாத வரிகள் நீக்கம் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை! - kalviseithi

Jun 30, 2019

புதிய பாடப்புத்தகங்களில் இருந்த தேவையில்லாத வரிகள் நீக்கம் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை!


7, 8, 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் இருந்த தேவையில்லாத வரிகளை நீக்கம் செய்ய பள்ளிக்கல்வி துறை முடிவு செய்து இருக்கிறது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டும், மீதமுள்ள வகுப்புகளுக்கு இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதில் 1, 2 மற்றும் 9, 11 ஆகிய வகுப்புகளின் பாடபுத்தகங்களில் தேசிய கீதம் தவறாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அண்மையில் செய்திகள் வெளியாகின. அதேபோல், 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் இந்தி மொழி தொடர்பான ஒரு தகவல் அச்சிடப்பட்டு இருந்தது. அதுவும் சர்ச்சைக்குள்ளாகியது. மேலும், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 11-ம் வகுப்பு வரலாறு பாடபுத்தகங்களில் வைகுண்ட சுவாமிகள் குறித்த தகவல்களும் தவறாக இருந்தன. அதுமட்டுமல்லாமல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல், 9-ம் வகுப்பு அறிவியல் பாடபுத்தகங்களிலும் சில தவறுகள் இருந்தன. இந்த நிலையில் தவறாக அச்சிடப்பட்டு இருந்த தேசிய கீதத்தை திருத்தி பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது 7, 8, 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடபுத்தகங்களில் இடம்பெற்று இருந்த தேவையில்லாத வரிகள், பத்திகளை நீக்கி சரியான வார்த்தைகளை சேர்க்க பள்ளிக்கல்வி துறை முன்வந்திருக்கிறது.

அதில் ‘7-ம் வகுப்பு சமூக அறிவியல்பாடபுத்தகத்தில் 210-ம் பக்கத்தில் ‘இந்திமொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக உள்ளது’ என்பதை நீக்கிவிட்டு, இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழியும், இந்தி பேசப்படாத மாநிலங்களில் மாநில இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று சேர்க்க சொல்லி இருக்கிறது. இதுபோல், ஏராளமான திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி