தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், தொண்டி அரசு பள்ளி வகுப்பறையில் ஏசி பொருத்தி மாணவர்களை குஷிப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்ேறார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அதிகமான பள்ளிகளை அரசு மூடி விட்டது. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியாமல் ஆசிரியர்கள்திணறி வருகின்றனர். இருப்பினும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை தனித்துவமாக காட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் நேற்று தொண்டி கிழக்கு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4 மற்றும் 5ம் வகுப்பு அறைகளுக்கு குளிரூட்டப்பட்ட வசதி திறப்பு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமை வகித்தார். இனி வரும் காலங்களில் அனைத்து வகுப்பறையிலும் குளிர்சாதன வசதி செய்ய ஏற்பாடுசெய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி