காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2019

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு


காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிவறையை பராமரிக்க தண்ணீர் இல்லாததால் அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. எங்கு திரும்பினாலும் வறட்சியான நிலையே காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட நகர வாசிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து ஐடி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்னன. தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலை, தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், இன்று முதல் அடுத்தமாதம் 5ம் தேதி வரை 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயக்கப்படும் என அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இதையடுத்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லையென்கிறாரே?

    ReplyDelete
  2. அவர் வீட்ல சொல்லியிருப்பார் சார்

    ReplyDelete
  3. அடுத்த வருடம் முழு நாளும் பள்ளிகள் மூடும் படி ஆகும். முடிந்தவரை மரம் வளர்ப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி