அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு - kalviseithi

Jun 4, 2019

அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு


அரசு பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், வேதியியல், உயிரியல் பிரிவு பாடங்களை எடுத்துபடிக்கும் மாணவர்களின் ஆய்வக சோதனைக்கான உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் வாங்குவதற்காக தலா ரூ.45,000 வருடந்தோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும் அந்த ஆய்வக படிப்புக்கான புத்தகங்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு உள்ள ஆசிரியர்கள், இந்த தொகையை முறையாக பயன்படுவது இல்லை என்றும், ஆய்வகங்களுக்கு முறையான வேதிப்பொருட்களையும் வாங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தரம் குறைந்த ஆய்வகப்பொருட்கள் வாங்கப்பட்டு முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது சம்பந்தமாக எந்த ஒரு ஒப்பந்த புள்ளி அறிவிப்புகளையும் வெளியிடவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்கவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் ஆய்வகங்களுக்கு பொருள் வாங்குவதற்கான வெளிப்படையான ஒப்பந்தத்தை ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு பள்ளிகளும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை, வருகிற 17ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7 comments:

 1. ஊழல் என்பது இத்துறையில் மட்டுமா? மனுதாரர் வேறு துறைக்கு வழக்கு போட நேரம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. பள்ளிக்கல்வித்துறையில் அதிகமான ஊழல் நடைபெருகிறது தோழரே

   Delete
 2. Lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum kanyakumari District vacancy not displayed in2018 counseling. after administrative transfer dpi dst math vac filled by lancham >51 etharkku valakku portal no proof no judmnt lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham vangi transfer order kodukkiranga lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum

  ReplyDelete
 3. பயோமெட்ரிக் வருகைப்பதிவை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்தினால் அவர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் செயலாக இருக்கும். ஏனென்றால் வேறு வழியின்றி முழு நேரமாகப் பணியாற்றி 7700 - ஐ மிகப் பெரிய ஊதியமாக பெற்று வயிற்றெரிச்சலோடு எட்டாவது ஆண்டாக உணவிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் அனைத்து வேலைகளையும் அவசரம் அவசரம் என்று கேட்டு வாங்கும்போது(கணிப்பொறியில் அனைத்து பதிவுகளும்) மூன்று அரை நாட்கள் என்பதற்குப் பதிலாக மனசாட்சியில்லாமல் வேலை பார்க்கின்றோம் என்பது தெரிந்தும் அரசு அதிகாரிகள் எங்களை கண்டுகொள்ளாமல் வேலையை மட்டும் வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். எங்களின் வேதனையை யாரிடம்தான் கொண்டு செல்வது என்று தெரியவில்லை.

  ReplyDelete
 4. கஷ்டப்பட்டு படித்து படித்து 2013-ல பாஸ் பண்ணி 2017 ல பாஸ் பண்ணி இப்போ 2019 ல பாஸ் பண்ணி வாழ்க்கையை மாற்ற போகிறதா? இந்த தேர்வு? இப்படியே ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? இதில் வேறு வேலை பார்த்துக்கொண்டு திருமணமாகி குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருப்பவர்களும் மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிக்கு ஒரு புறம் அனுப்பிவிட்டு (அரசு சார்பில்) தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யப் போகிறோம்?

  ReplyDelete
 5. கருவறை முதல் கல்லறை வரை டெட்பாடி ஆட்சியில் ஊழல் ஊழல் ஊழல் முக்கியமாக மாங்கொட்டை மண்டையா செங்கோட்டையன் உன் ஊதியத்தை பிடித்தால் பிச்சை செங்கோட்டையன் கல்வித்துறை ஊழலின் பிறப்பிடம் புகுந்து விளையாடுகிறது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி