அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2019

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு



பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டங்களில்ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் பணிபுரிந்தார். அவர் மே 31 ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை பி.டி.ஓ.,ஆக பணிபுரிந்த போது தொகுப்பு வீடுகளை தகுதியில்லாத பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடவும் முடிவு செய்துள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செல்வம் கூறியதாவது:சுப்பிரமணியன் மீதான நடவடிக்கை திரும்ப பெற கோரி இன்று (ஜூன் 3) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஜூன் 12 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருப்போம்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜூன்16 ல் மாநில செயற்குழு கூடி முடிவு செய்யும். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவர். ஜூன் 11ல் விருதுநகர் கலெக்டர் அலுவலக முற்றுகையில் ஈடுபடுவர், என்றார்.

1 comment:

  1. ,ex president named citra kala aravenu jackanarai panchauat nilgiri district had done same mistake in my place my nsme is lalithaa kallada aravenu nilgiris phone no 7373362374

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி