அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2019

அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.



பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தரராஜன் யோகா செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் சிந்தனை சிதறாமல் அறிவை மேம்படுத்த யோகா பயிற்சி உதவுவதாக தெரிவித்தார்.

மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டதாக யோகா உள்ளதாகவும், வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை என்று அவர் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் என்ற நிலைபாட்டில் அரசு தெளிவாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

7 comments:

  1. கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருப்பது மனதிற்கும், வேலை இல்லாமல் திண்டாடுவதால் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் மிகவும் அவதிப்பட வேண்டி உள்ளது

    ReplyDelete
  2. Tet 2013,2017,2019 kum tet pass pannavaragali appointment pannavum....nangalum vethenaiyudan irukurom .....

    ReplyDelete
  3. Special teachers mattuma???

    TRB polytechnic.... TET...PGTRB 2017 chemistry extra marks???

    ReplyDelete
  4. இந்தாளும் 5 வருசம் முடியும் வரை ஒரு ஆணியும் புடுங்க போறதில்லை

    ReplyDelete
  5. TET தேர்ச்சி பெற்று மற்றும் யோகா முடித்தவருக்கு பணி வழங்கினால் சிறப்பாக இருக்கும் அனைத்து பெற்றோர் சார்பாக கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  6. இருப்பவர்களுக்கே சம்பளம் கொடுக்க திணறிவரும் அரசு எந்த ஆசிரியர்களையும் நியமிக்க போவதில்லை இதில் யோகா. வேறு...

    ReplyDelete
  7. இவன் ஒரு வாய் புழுகள் மன்னன், இந்த ஆளுகிட்ட இருந்து எப்போ கல்வித்துறை அமைச்சர் பதவி போகுதோ அப்போ தான் டெட் பாஸ் பண்ணவர்களுக்கு பணி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி