நீட் தேர்வில் தமிழக அளவில் வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவி ஸ்ருதி முதலிடம் - kalviseithi

Jun 6, 2019

நீட் தேர்வில் தமிழக அளவில் வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவி ஸ்ருதி முதலிடம்


நீட் தேர்வில் தமிழக அளவில் பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ்மாணவி கே.ஸ்ருதி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

நீட் தேர்வில் 685 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 57-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் ஓபிசி பிரிவில் அனைத்திந்திய அளவில் 9-வது இடத்தையும் கே.ஸ்ருதி பெற்றுள்ளார். இவரது தந்தை டாக்டர் எஸ்.கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். தாய் ஆர்.கோமதி. மகப்பேறு மருத்துவர். திருவள்ளூரில் சொந்தமாக மருத்துவமனையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.மகளின் சாதனை குறித்துகூறிய டாக்டர் எஸ்.கார்த்திகேயன், “பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸில் தங்கி ஸ்ருதி படித்துவந்தார். அம்மா போல் மகப்பேறு மருத்துவர் ஆவதே அவரதுலட்சியம்.

பள்ளியில் சிறப்பு அனுமதி பெற்று விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு படித்தார். எங்கள் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்தது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.ஸ்ருதிக்கு வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

4 comments:

  1. விளம்பரமா.?????

    ReplyDelete
  2. NEET is nothing but BUSINESS oriented for EDUCATION....compare her study material with Govt.students material....none of the above....

    ReplyDelete
  3. This is not good for kalviseithi avoid this kind of news for coming days...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி