கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்
நாளை முதல் நீங்களின்றி வாடிக்கிடந்த கல்விப்பூங்கா உங்களால் புன்னகைக்கட்டும்
கரும்பலகைகள் கண்சிமிட்ட வெள்ளைக்கவிதைகள் அரங்கேறும்
மேசைகளும் நாற்காலிகளும் உங்கள் வாசத்தால் குதூகலிக்கும்
பிரிதல் கடந்த புரிதலில் நட்புகள் கதை அளாவும்
மைதானங்கள் உங்கள் பாதச்சுவடுகளை பரிசென ஏற்கும்
ஒரு படி முன்னேறிய பேரானந்த பூரிப்பில் இனிதென மத்தாப்பாய் உங்கள் மனம் மலரும்
குழந்தைகளே
உங்களால் சிறக்கட்டும் அறிவுத்திருக்கோயில்
மதிப்பளியுங்கள்
மதிப்புணருங்கள்
சமூகத்தின் சாளரம் திறக்கட்டும் உங்கள் கல்வி
இவ்வருடம் யாவும் புதிது
அத்தனையும் இனிது
பள்ளிக்கல்வித்துறையோ பாங்குற சமைத்தே இருக்கிறது
நற்கல்வி அமுது
நேர்க்கோடு
வளைக்கோடு
இத்தோடு இணைகிறது
உங்களை ஈர்க்கிற பார்கோடு*
நிறைய கற்க
கற்றதன் வழி நிற்க
புத்தகம் கடந்த பெருஞானத்தையும் அள்ளி வந்தளிக்கும் ஆசானை மதித்தொழுகுக
போட்டி சூழ் உலகிது
வெல்லும் வழியறி
தளரா மனங்கொள்
அறிவால் அகிலம் ஆள்
பூமிப்பந்தின் நம்பிக்கைகளே
புதுமை சமையுங்கள்
உடனிருக்கிறோம் நாங்கள்
பாரெங்கும் பரவட்டும் உங்கள் அறிவு சுவாசம்
உச்சம் காணட்டும் உங்களால் இத்தேசம்
வாழ்த்துகளுடன்,
சீனி.தனஞ்செழியன்
அருமை அருமை
ReplyDeleteSuper sir
ReplyDeleteஅருமை!அருமை!
ReplyDeleteSuper sir
ReplyDelete