அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசலேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்செங்கோட்டையன் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:புதிய பாடதிட்டம், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுக்கும் விடை அளிக்கும் வகையில் உள்ளது.

 கடந்தஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வில் இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும். தமிழகத்தில் இடைநிலைஆசிரியர்கள் 7,500 பேர் அதிகமாக உள்ளனர். அவர்களை மற்றபள்ளிகளுக்கு மாற்ற ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனியாக வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் சலுகை வழங்க முடியாது.அதேபோன்று தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க முடியாது. ஸ்மார்ட் கார்டை மாணவர்கள் பஸ் பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கலந்தாேலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்படும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

2 comments:

  1. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக ஐம்பது சதவீதம் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வேண்டும். பின்னர் பாருங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தானாகவே அதிகரிக்கும். அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்கும் கூடாது.

    ReplyDelete
  2. I request to TamilNadu govt brings all the facility which is having in the private school such as smart board, computer classes starting from the class 1 to 12, weekly once worksheets for lesson wise, assignments, (activity), karate classes, music classes etc and as well as Diary maintenance is must to the children daily home work have to give the children with class teachers signature the next day tomorrow the parents should sign in the diary. like these ways that the govt teachers and the management should follow means automatically parents will come forward to admit their children in the govt school and one more thing monthly once PTM that is parent teachers meeting should must contact in the govt thatwise parents should know in which position their children is? With God bless TamilNadu govt come forward to give these facilities for the each govt school means many abdul kalams will take care of our India.Jaihind Soonly these facilities will reach to the children in the future.God bless the children with the support of the TamilNadu govt.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி