கல்விச்செய்தியின் ரமலான் வாழ்த்துக்கள்!! - kalviseithi

Jun 5, 2019

கல்விச்செய்தியின் ரமலான் வாழ்த்துக்கள்!!

ரம்ஜான்

இது
முசல்மான்கள்
எனும் அசல்மான்களின் திருவிழா

இது
நோன்புப் பண்டிகை
அல்ல அன்புப் பண்டிகை


இவர்கள்
குறைமதியை வணங்கியே
வட்டி தவறு எனும்
நிறை மதியைப்
பெற்றவர்கள்

ஜான்
விரல்களின் அளவு
ரம்ஜான்
விரதத்தின் அளவு

ஏழைகளின்
வயிற்றுப் பசியை
அறிந்து பார்க்கவே
இப்பண்டிகை
இதற்கு ஈடு
எப்பண்டிகை

நாம் உண்டி
கொடுத்து இல்லாதோர்க்குக்
கொடுப்போம் கை

ரம்ஜானில்
பூக்கின்ற தேன்பூ
அது நோன்பு

ரம்ஜான் கிறிஸ்துமஸ்
தீபாவளி அனைத்தும்
ஒரே நாளில் வரவேண்டும்
அனைவரின் இன்பதுன்பங்களும்
ஒரே இறைவனின்
தோளில் விழவேண்டும்

கோயிலில் ஏசுவும்
மசூதியில் சிவனும்
தேவாலயத்தில் நபியும்
வாழவேண்டும்
வேற்றுமைகள் வாழவேண்டும்

எதிர்காலத்தில்
எதிர்ப்பதங்களாய்
இருக்கும் மும்மதங்கள்
இணைந்து சம்மதங்கள்
ஆகவேண்டும்

அனைவருக்கும்
ரம்ஜான் வாழ்த்துக்கள்.

முனைவர் ம.குமரவேல்

1 comment:

  1. சில‌ த‌வ‌றுக‌ள் உள்ள‌ன‌...முஸ்லீம்க‌ள் பிறையை வ‌ண‌ங்குவ‌தில்லை..ஒரே இறைவ‌னை ம‌ட்டுமே வ‌ண‌ங்குவ‌ர்...
    அவ‌ர‌வ‌ர் ம‌த‌ உண‌ர்வுக‌ளை பிற‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ரும் உண‌ர்ந்து,அவ‌ர்த‌ம் உண‌ர்வை ம‌தித்து ,அன்புட‌னும்,சகோத‌ர‌த்துவ‌த்துட‌னும்,அர‌வ‌ணைப்புட‌னும் ஒற்றுமையாக‌ ம‌ற்ற‌வ‌ரைப்(உயிர்,உட‌மை,உரிமை) பாதுகாத்து வாழ்வ‌தே உண்மையான‌ ம‌த‌ந‌ல்லிண‌க்க‌ம்...ஜெய்ஹிந்த்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி