பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2019

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு!


 மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தனர்.

 இச்சந்திப்பின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

 தற்போது வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பணிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 மேலும், அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் பல்வேறு மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது பற்றியும், 20 - 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள மூத்த ஆசிரியர்களும் இதில் பாதிப்படைந்துள்ளது பற்றியும் எடுத்துக் கூறி இதனைச் சரி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 இக்கோரிக்கைகள் குறித்து இயக்குநரை நேரில் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

சென்னை.
26.06.2019

9 comments:

  1. பகுதி நேர ஆசிரியர் நிலை?

    ReplyDelete
  2. இரண்டு வருடம் எந்த ஒரு பிரிவிலும் ஒரு ஆசிரியர் பணி கூட போடவில்லை. இதெல்லாம் கேக்க மாட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க தற்காலிய ஆசிரியரா போனிங்க.எங்களுக்கு எதிரா.நாங்க உங்களுடைய நலனுக்காக போராடினோம்

      Delete
    2. Sir thappa purijikitiga yegal Pani nirandharapani illa yegala meratti kattayapaduthi velaiku vara vachaga irukara 7000 varumanamum poita naga Nadu theruvuladha nikanum

      Delete
  3. Tet 2013 2017 candidate amaicharai santhikanum apdi ilana sattamandra kootathodarla yarachum MLA pudichu question keka sollanum

    ReplyDelete
  4. None of the notification was discussed about Tet passed Special teachers.

    ReplyDelete
  5. Please part time teacher's kaga support panuga

    ReplyDelete
  6. Jacto- jio will Give first preparance to spl.parttime teachers..

    ReplyDelete
  7. Yes please consider part time teacher's

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி