PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு தயார் ஆவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2019

PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வர வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தேர்வு அறிவிப்பு வந்துவிட்டது.

நம்பிக்கையோடு தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதுகலைபட்டதாரி ஆசிரியர் தேர்வானது 150 மதிப்பெண்களை கொண்டது.150 மதிப்பெண்களில் 110 மதிப்பெண்கள் உங்கள் பாட சம்பந்தமான கேள்விகளை கொண்டு இருக்கும். மீதம் உள்ள 40 மதிப்பெண்களில் 30 கேள்விகள் சைக்காலஜி மற்றும் கல்வியியல் சம்பந்தப்பட்டவை. இன்னும் இருக்கும் 10 மதிப்பெண்கள் பொது அறிவு சம்பந்தமானவை.தேர்வை பற்றி பார்த்தோம். இனி பாடத்திட்டம் பற்றி பார்ப்போம்.கீழ்காணும் லிங்கை பயன்படுத்தி தேர்வுக்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.http://www.tn.gov.in/trb/(பழைய லிங்க் தான்) ஓபன் ஆகவில்லை எனில் தனியாக syllabus பதிவை பதிவிடுகிறேன்.பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் பாடத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பள்ளி புத்தகம் முதல் இளநிலை மற்றும் முதுகலை புத்தகங்கள் அனைத்தும்(உங்கள் முக்கிய பாட சம்பந்தமானவை) தேவை.

பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்தாகிவிட்டது. புத்தகங்கள் எடுத்து வைத்தாகிவிட்டது. அடுத்துஎன்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறிர்களா…பாடதிட்டத்தில் உங்கள் மேஜர் (major subject) பாடமானது பத்து Unit ஆக இருந்தால் அதற்கு ஏற்ப பத்து நோட்டுகளை வாங்குங்கள். பாடத்திட்டத்தில் முதல் யூனிட்டில் முதல் தலைப்பை பாருங்கள். அந்த தலைப்பு ஆறாம் வகுப்புமுதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இருப்பின் அந்த தலைப்பில் புத்தகங்களில் உள்ள குறிப்புகளை எடுத்து உங்கள் நோட்களில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இப்படியே அனைத்து யூனிட்களுக்கும் குறிப்புகள் எடுத்து வாருங்கள். இப்படி எடுக்கப்படும் குறிப்புகள் தேர்வு நெருங்கும் நேரத்தில் மீண்டும் திருப்புதல் செய்யவும் மற்றும் எளிதாக நினைவில் நிறுத்தவும் உதவும். மேலும் குறிப்பட்ட தலைப்பை இணையத்தில் தேடி அதில் இருந்தும் குறிப்புகளை எடுத்து கொள்ளுங்கள்.

உங்களிடம் போதுமான புத்தகங்கள் இல்லையா… கவலையே வேண்டாம். உங்கள் மாவட்ட பொது நூலகங்களைநாடுங்கள். அங்கு அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும். அவற்றில் இருந்து முக்கிய பகுதிகளை நகல் எடுத்து கொள்ளலாம்.இப்படி தரமான பாட குறிப்புகளை நீங்களே தயார் செய்து படிப்பது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதுடன், அதிக மதிப்பெண்களை பெறவும் உதவும்.

என்றும் உங்கள்
Alla Baksh

13 comments:

  1. Replies
    1. கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...
      தருமபுரி தமிழ்த்தாமரை மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக TRB PG TAMIL. -தமிழ் பாடத்துக்கு மட்டும் online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 20 க்கு மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..இதுவரை இணைந்த 25 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது..
      சென்ற தேர்வில் online மூலம் பயின்றவர்களில் 7 பேர் இன்று முதுகலை ஆசிரியப்பணியில்...


      NET 2018 ல்

      * தேர்வெழுதிய 7 பேரில் 6 பேர் தேர்ச்சி..
      *இருவர் JRF க்கு தகுதி
      என தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் வெற்றி கண்டுள்ளனர்..

      *அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பு பெற்றுள்ளனர்..கடந்த 2 ஆண்டுகளில் JRF பெற்றவர்கள் 6 பேர்..

      எனவே வெற்றியே எனது உழைக்கக் கூடியவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்..

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேரும்படி கேட்டுக்கொள்கிறேன்... தொடர்புக்கு 7598299935

      இது விளம்பரமல்ல ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக...

      Delete
    2. I want trb english materials..

      Delete
  2. Second year Pg waiting for results candidates call to me urgent 9600640918

    ReplyDelete
  3. முடிந்த தேர்வுகளுக்கு பணி நியமனம் எப்போது?...இதுல அடுத்த தேர்வு...வெலங்கிடும் wast trb....

    ReplyDelete
  4. Going back your past PG TRB Exam experience...Note that some other bad experience and Erased all idle events...

    If you had learned more ideal experience... Utilized to this exam...

    Tension free life was get more victory...

    Now start your preparation very well...And hard with smart work...

    Some days that's all...


    All the best...


    If you need PG TRB Commerce Study material contact us...
    www.commerceteachersacademy.com
    94897 15541,
    93844 35542.

    ReplyDelete
  5. Allabakash sir please give reference book for pg trb HISTORY and your phone number with thanks rasheedkhan

    ReplyDelete
  6. Trp material no use so grammar and literature book so study well

    ReplyDelete
  7. Trp Tamil material available endru ad vanthal cc varumanam Tamil grammar and literature book study well Tamil teachers 15000 cc and material 5000 oruvelai neengal rich family irunthal material vangi study pannunga your choice my tamil teacher

    ReplyDelete
  8. Trp tamil teachers material available endru ad vanthal Cc varumanam so grammar and literature book study well oru velai rich family irunthal vangi study pannunga your choice

    ReplyDelete
  9. Second year b ed padepavargap trb apply panna mudiyuma?

    ReplyDelete
  10. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி