RTE 25% கீழ் 81,000 ஏழை மாணவர்களுக்கு இலவச சீட். - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2019

RTE 25% கீழ் 81,000 ஏழை மாணவர்களுக்கு இலவச சீட். - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்


தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் இலவசமாக, 81,000 ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். நடப்பு கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கு, இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22 துவங்கி மே 18 வரை நடைபெற்றது.இதில் 1, 20,000 பேர் விண்ணப்பித்தனர். இதில் தகுதியற்ற 7,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

எஞ்சியிருந்த 1.13 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு பரிசீலனை செய்யப்பட்டன.இதில் டிஜிஇ எனப்படும் ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி மற்றும் எச்ஐவி பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் கடந்த மே 31 அன்று சேர்க்கை வழங்கப்பட்டது.அதேபோல், 25 % ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவான விண்ணப்பங்கள் வந்த 3,000 பள்ளிகளில் உள்ள இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பித்த 30 ஆயிரம் பேருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் தேர்வாகும் குழந்தைகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும். இலவசசேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தவேண்டாம்.இவர்களுக்கான கட்டணத்தை அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் 1.21 லட்சம் இடங்களுக்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் தகுதியான 81,000 பேருக்கு மெட்ரிக் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

7 comments:

  1. Good decision increase the percentage, close the govt schools. Recent years refucre birth rate, RTI admission 25 percent. How students come for govt schools. Govt working for private schools. IncasIn this scheme not available in our state, nearly 2500 teachers got govt job. And their families live well. But only private schools owner earning. Nobody can change it. Bcoz of it, huge gap poor people and rich. It's not good for peaceful life. If possible , I requested to educational secretary explain it to our education minister and change the system. Thank you.

    ReplyDelete
  2. RTE மூலம் ஒதுக்கப்படும் 25/. மாணவர்களுக்கு அரசு ஏன் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும். 75/. மாணவர்கள் மூலம் பெரும் கட்டணம் போதாதா. அரசே தனியார் பள்ளிகளை ஆதரிப்பதை நிறுத்தி, அந்த நிதியை அரசு பள்ளி மேம்பாட்டிற்காக பயன் படுத்தலாம்.

    ReplyDelete
  3. தேர்வு பெற்ற மாணவரிடம் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என பள்ளி நீர்வாகம் கேட்பது சரியா

    ReplyDelete
  4. Rte Select ஆன பிறகும் ஒரு குறிப்பிட்ட Amount வாங்குற School யை என்ன பண்றது.

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கம் tuition fees மட்டும் வழங்கும்...பாடப்புத்தகம் மற்றும் இதர செலவினங்கள் பெற்றோர் வழங்க வேண்டும்...

      Delete
  5. தனியார் பள்ளிகள் அரசிடமும் மாணவர்களிடமும் இருந்து எந்த கட்டணமும் பெறாமல் கல்வி கற்பித்தால் இதனை இலவசக் கல்வி என கூறலாம்.அரசே பணத்தை தனியார் பள்ளிகளுக்கு அளித்து விட்டு இலவசக் கல்வி என மெட்ரிகுலேஷன் இயக்குநர் அறிவிப்பு வெளியிடுவது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி