TNPSC தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2019

TNPSC தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் -1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக ஜூன் 17ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு விவரம்:

சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குரூப் -1 தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். கடந்த மார்ச் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப்- 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 1,68,000 பேர் எழுதியிருந்தனர். அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 9,050 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. கட் ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறு என்றும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த தேர்வு நடத்தப்பட்டது என்றும் விக்னேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே குரூப்-1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும், 24 கேள்விகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தேர்வு குளறுபடி தொடர்பாக பதிலளிக்க உத்தரவு:

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக கோபம் அடைந்த நீதிபதி, தாம் தேர்வுக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நேற்று பிற்பகல் டி.என்.பி.எஸ்.சி தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். மேலும் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகளும் தவறானவை என தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தரப்பு பதிலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதி தேர்வுகளில் குளறுபடி நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக ஜூன் 17ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரிக்கை:

இந்த நிலையில், தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 5% பேர் பாதிக்கப்பட்டாலே தேர்வை ரத்துச் செய்யலாம் என்று விதி உள்ளது. இதையடுத்து தேர்வு எழுதியவர்களில் 20% பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

12 comments:

  1. தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்ணை வழங்கி அடுத்த கட்டத்துக்கு நகருங்கள்

    Reexam கேட்பவன் கேட்டுக்கொண்டே தான் இருப்பான்... படித்து pass பண்ணவன் தான் பாதிக்கப்படுவான்

    ReplyDelete
    Replies
    1. 24 கேள்விக‌ள் த‌வ‌றான‌வை எனில் எவ்வாறு த‌குதியான‌வ‌ர்க‌ளை தேர்வு செய்வ‌து...த‌விர‌ 10 இல‌ட்ச‌ம் பேர் எழுத‌க் கூடிய‌ குரூப் 4 தேர்வில் கூட‌ ம‌திப்பெண்க‌ளை வெளியிடும் போது குருப் 1&2 தேர்வில் ஏன் டி.என்.பி.எஸ்.சி யினால் வெளியிட‌ முடியாதா?...வெட்க‌க்கேடு...

      Delete
  2. 7 லட்சம் பேர் எழுதிய TET.. வெறும் 3000 பேர் தான் பாஸ் செய்கிறோம்

    மீதி
    700000-3000/700000 = 99.5% பேர் பாதிக்கப்பட்டதாக சொல்வார்கள்.. cancel செய்வீர்களா???

    ReplyDelete
    Replies
    1. 24 கேள்விக‌ள் த‌வ‌றான‌வை எனில் எவ்வாறு த‌குதியான‌வ‌ர்க‌ளை தேர்வு செய்வ‌து...த‌விர‌ 10 இல‌ட்ச‌ம் பேர் எழுத‌க் கூடிய‌ குரூப் 4 தேர்வில் கூட‌ ம‌திப்பெண்க‌ளை வெளியிடும் போது குருப் 1&2 தேர்வில் ஏன் டி.என்.பி.எஸ்.சி யினால் வெளியிட‌ முடியாதா?...வெட்க‌க்கேடு...

      Delete
  3. Kandippaga deo exam layum kularubadi nadanthirukku...sila questions doubt irukku.. and also selection layum etho nadanthirukku..cutoff 85 to 90 varum nnu sonnanga..but 100 above kku kidaikkala..ithukkum ( deo preliminary exam) case file panniruppangalaaaaa..??

    ReplyDelete
  4. குளறுபடிகள் ஒன்ற இரண்டா
    வர வர
    எல்லா இடங்களிலும் நீக்கமறநிறைந்து ஆலமரமாக நிமிர்ந்து நின்று
    நேர்மையாக எழுதி வர வேண்டும் என்பவர்களைப்பார்த்து ஏமாளி,கோமாளி என கொக்கரித்து சிரித்து கொண்டு இருக்கிறது....

    இதை வேரோடு உடனே பிடிங்கி எரிவது எளிதானதாக இல்லை என்றாலும்
    இப்பொழுதெல்லாம்
    இது சகஜம்,
    வேறு வழியில்லை
    என்று
    பொருத்துக்கொண்டே இருக்க முடியாது....
    இருக்கவும்
    இருக்கக்கூடாது....
    சிறிய அளவிலான யோசனை...
    ஏன்
    தேர்வில் வெற்றிபெற்றவர்களின் விடைத்தாள் மற்றும் தேர்வு பெற்றவர்கள் எந்த எந்த அடிப்படைகளில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தின் பட்டியலை
    மட்டுமாவது
    பொதுவெளில் அல்லது கணினி வழியில் ஒரு மாதத்திற்கு மக்களின் பார்வைக்கு வெளியிடலாமே....

    எந்த போட்டித்தேர்வுவானாலும் சரி எழுதிய அனைவரின் விடைத்தாளை வெளிப்படையாக தாருங்கள் என்று கேட்டால்,
    கால விரையம், பணவிரையம் என்று நொண்டிச்சாக்கு கூட சொல்லலாம்...

    ReplyDelete
  5. PG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075

    ReplyDelete
  6. PG TRB MATHS materials ethu best

    ReplyDelete
  7. போட்டி தேர்வு மற்றும் தகுதி தேர்வுகள் இல்லாமல் வெறுமனே pH.d மூலம் 2007 க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களை கொண்டு வினா தாள் தயார் செய்தல் இப்படித்தான் ஆகும். அவர்களே போட்டி தேர்வு எழுதாமல் வந்தவர்கள். பல முறை இதே தவறுகள் இப்படி நடக்கின்றன.

    ReplyDelete
  8. Thapu thappa question yatopennkal vetranum mana ulaisal yanna akkuthu..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி