TNPSC - குரூப்-4 தேர்வு; சென்னையில் இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை ஆட்சியர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2019

TNPSC - குரூப்-4 தேர்வு; சென்னையில் இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை ஆட்சியர் அறிவிப்பு.


தமிழக அரசால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு, அரசு நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புகள் குறித்து சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளதாவது:

“மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது) சாந்தோம் சென்னை அலுவலகத்தில் இயங்கி வரும்தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.இப்பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4, 2019 தேர்வுக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இதற்கான பயிற்சி வகுப்பு வரும் ஜூன் 19 முதல் சென்னை சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் 18.06.2019-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது) சாந்தோம் சென்னை-4 அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்புகொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்''.இவ்வாறு சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி